அரிசி ரொட்டி

இவர்தான்

மழலைஸ்

சமையற்கலை

நிபுணர்

மாலினி மாமி



அரிசி ரொட்டி

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு 1 ஆழாக்கு
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 2
பச்சை மிளகாய் பொடியாய் நறுக்கியது 2
தேவையான அளவு உப்பு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயுடன் உப்பைச் சேர்த்து இடையிடையே சிறிதளவு வெந்நீரைத் தெளித்து உருண்டை பிடிக்கக்கூடிய பதத்தில் நன்றாகப் பிசையவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவர் அல்லது ஷீட்டில் சிறிது நல்லெண்ணெய் தடவி அதன்மேல் ஒவ்வொரு உருண்டையாக வைத்து வட்டமாக ஒரு சப்பாத்தியளவுக்குக் கையால் தட்டி எடுத்து அதை தோசைக்கல்லில் போட்டு இரு பக்கமும் நன்கு சிவக்குமளவு வேகவைக்கவும்.

வெங்காயம் பிடிக்காதவர்கள் அதற்கு பதிலாகத் தேங்காயைத் துருவிப்போட்டு கலந்துகொள்ளலாம்.

அரிசி ரொட்டி தாயார்.

இதனை தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.